அருள்மிகு மாசாணி அம்மன் - திருவிழாக்கள்

    தை மாதத்தில் 18 நாட்கள் திருவிழா போல வெகுவிமரிசையாகக் கோவிலில் கொண்டாடப்படுகிறது(ஜனவரி-பிப்ரவரி,மேலும் அமாவாசை நாட்களில், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில்) அனைத்து விழாக்களும் கொண்டாடப்படுகிறது.

வருடாந்திர விழா (குண்டம் திருவிழா) :

    இத்திருக்கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் குண்டம் (பூமிதி) திருவிழாவாகும். பொதுவாக குண்டம் திருவிழா கொங்கு நாட்டின் சிறப்பான திருவிழாக்களில் ஒன்று. இக்குண்டம் திருவிழா தைத்திங்கள் அமாவாசை அன்று திருவிழா கொடியேற்றப்பட்டு, கொடி ஏற்றிய 14-ம் நாள் இரவு ஊர்வலமாக மயானக்கரைக்குச் சென்று மயான மண்ணினால் அம்மனின் உருவச்சிலை செய்து அதற்கு சக்தி பூஜை செய்யப்படுகிறது. 15-ம் நாள் கங்கனம் கட்டிய பின் திருக்கோயில் கும்பஸ்தானம் நடைபெறும்.

    மயான பூஜையில் குண்டத்தில் இறங்கும் ஆண்களும், கும்பம் எடுத்துக்கொள்ளும் பெண்களும் மிகுந்த பக்தியுடன் கலந்து கொள்கிறார்கள். 16-ம் நாள் சித்திரை தேர் வடம் பிடித்து, நகரை வலம் வந்த பின் அன்று இரவு அக்னிகுண்டம் வளார்க்கப்பட்டு 17-ம் நாள் காலையில் பக்தார்கள் (ஆண்கள் மட்டும்) குண்டத்தில் இறங்குவார்கள். 18-ம் நாள் அம்மனுக்கு திருமஞ்சள நீராட்டு விழா நடைபெற்றபின் அன்றிரவு மகாமுனியப்பன் பூஜையுடன் குண்டம் திருவிழா நிறைவு பெறும்.

    இக்குண்டம் திருவிழா கோவை மாவட்டத்தில் புகழ்மிக்க பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் சிறந்த பெருந்திருவிழாவாக விளங்குகிறது.

    வைகாசி விசாகம், ஆடிப்பெருக்கு, ஆடிப்பூரம், தமிழ்வருடப்பிறப்பு, மாதாந்திர அமாவாசை, விநாயகா; சதுர்த்தி, தீபாவளி, கார்த்திகை தீபம், மார்கழி தனுர் மாதபூஜை, நவராத்திரி விழா ஆகிய நாட்களில் விசேச தினங்களாக கொண்டாடப்பட்டு வருகிறது.

புகைப்படம்
வேலை நேரம்

காலை : 6.00 AM

முதல்

மாலை : 8.00 PM