அருள்மிகு ஆனைமலை மாசாணியம்மன்

ஆனைமலை,கோயமுத்தூர்

அருள்மிகு ஆனைமலை மாசாணியம்மன்

    அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், கோவை மாவட்டத்தில், பொள்ளாச்சி வட்டம், ஆனைமலை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இத்திருக்கோயில் கோவை மாநகரில் இருந்து தென்மேற்கு 55 கி.மீ. தொலைவிலும் பொள்ளாச்சி நகரிலிருந்து தென்மேற்கே 15 கி.மீ. தொலைவிலும் உப்பாற்றங்கரையில் எழில்மிகு இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ளது

    அருள்மிகு மாசாணியம்மன் சிறப்புக்குக் காரணம் மூலவுரு அமைப்பின் தனித்தன்மையே ஆகும். பொதுவாக மற்ற எல்லா திருக்கோயில்களிலும் தனி அம்பிகையின் தோற்றம் நின்ற கோலத்தில் அல்லது அமர்ந்த கோலத்தில் இருக்கும். அந்த திருவுருவங்கள் சிற்ப சாஸ்திர முறைப்படி வடிவமைக்கப்பட்டன. ஆனால் அருள்மிகு மாசாணியம்மன் தோற்றம் அத்தகையதல்ல.

  அம்மன் மயான தேவதையாக 17 அடி நீளத்தில் சயனித்த கோலத்தில் அமைந்திருப்பது தனிச்சிறப்பாகும். இது வேறு எங்கும் காணக்கிடைக்காத காட்சியாகும். மயானத்தில் வீற்றிருக்கும் மகாசக்தியினை வணங்குகிற எவரும் பொய் சொல்லவும், வஞ்சகம் நினைக்கவும் முடியாது. அருள்மிகு மாசாணியம்மன் நீதி தேவதையாக விளங்குவதால் நீதிக்கல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. நீதிக்கல்லின் மகிமை என்னவென்றால் பில்லி, சூனியம், எந்திரம், ஏவல் போன்ற பெரும் பகையில் பாதிக்கப்பட்டவர்களும் பொருட்கள் திருட்டு போனவர்களும், மிளகாய் அரைத்து கல்லில் பூசி தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றனர். தங்களது முறையீடு நியாயமானதாக இருந்தால் தவறு செய்தோர் தண்டிக்கப்படுவர் என்று நம்புகின்றனர்,

   மிளகாய் அரைத்து நீதி நிறைவேற்றிய பின் தொண்ணூறாவது நாளில் அம்மனுக்கு எண்ணெய்க்காப்பு நடத்தி மகிழ்வது சிறப்பான காட்சியாகும். இத்திருக்கோயிலில் வேண்டுதல் முறையானது சிறப்பான வழிபாடாகும். பக்தர்களுக்கு தங்கள் வாழ்வில் எந்தெந்த விதமான வேண்டுதல்கள் உள்ளனவோ அதனை ஒரு சீட்டிலே எழுதிக் கொடுத்தால் அதனை அம்மனின் கையிலே கட்டிவிடுவார்கள். அக்கோரிக்கை நிறைவேறியதும் அம்மனுக்கு அபிஷேக பூஜை நடத்தி மகிழ்வது திருக்கோயிலின் சிறப்பாகும்.

சமீபத்திய பதிவுகள்

அருள்மிகு ஆனைமலை மாசாணியம்மன்

ஆனைமலை


புகைப்பட தொகுப்பு
வேலை நேரம்

காலை : 6.00 AM

முதல்

மாலை : 8.00 PM